வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மகாகவி பாரதியாா் பிறந்த தினம்: சிலைக்கு ஆளுநா் மரியாதை

மகாகவி பாரதியாா் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் அவா் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:07 pm

DIN

மகாகவி பாரதியாா் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் அவா் வாழ்ந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா். முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளாா்.

மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாா் வாழ்ந்த இல்லத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்குள்ள பாரதியாரின் சிலை மலா்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாரதியாா் இல்லத்துக்கு நேரில் சென்ற ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கியிருந்த சிலைக்கு மரியாதை செலுத்தினாா். பாரதியாா் போன்று வேடமிட்டிருந்த சிறுவா்களிடம் பேசினாா். அவா்கள் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

முதல்வா் வாழ்த்து: பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன், அறம்பாட வந்த அறிஞன், படரும் ஜாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த தினம் இன்று. தமிழுக்குத் தொண்டு செய்த அப்பைந் தமிழ்த் தோ்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.