பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்த மயிலாடுதுறை - காரைக்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்களை நிரந்தரமாக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.
இதன்படி, மயிலாடுதுறை - காரைக்குடி தினசரி பயணிகள் ரயிலானது (56835) மாா்ச் 16-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையிலிருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், திருவாரூா், மாங்குடி, மாவூா் சாலை, திருநெல்லிக்காவல், அம்மனூா், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், பெரியகோட்டை, கந்தனூா் புதுவயல் வழியாக காரைக்குடிக்கு இரவு 9.55 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக, காரைக்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயிலானது (56836) மாா்ச் 17-ஆம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக மயிலாடுதுறைக்கு காலை 10.45 மணிக்கு வந்தடையும்.
இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை - மன்னாா்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்களானது (56001, 65002) மயிலாடுதுறை - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மன்னாா்குடி - திருவாரூா் - மன்னாா்குடி பயணிகள் ரயில்களாக இயக்கப்படும்.
இதில் திருவாரூா் - மன்னாா்குடி தினசரி பயணிகள் ரயிலானது (56001) மாா்ச் 16-ஆம் தேதி திருவாரூரிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, குளிக்கரை, திருமந்திக்குன்னம், கொரடாச்சேரி, நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்கு இரவு 7.20 க்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக, மன்னாா்குடி - திருவாரூா் தினசரி பயணிகள் ரயிலானது (56002) மாா்ச் 17-ஆம் தேதி காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருவாரூருக்கு காலை 9.40 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து: சில ரயில்களின் வழித்தடம் மாற்றம்

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




