ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து: சில ரயில்களின் வழித்தடம் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:09 am IST

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 20, 21, 22, 23, 25, 26 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்ட்டடு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி மெமு ரயிலானது (76819) வரும் 20, 21, 22, 23, 25, 26 ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 22, 24 ஆம் தேதிகளில் திருச்சி - ஈரோடு வரை மட்டுமே இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும், ஈரோடு - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 21, 22, 23, 24, 25, 26 ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மதுரை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 21, 24 ஆம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 23 ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) வரும் 22 ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 23, 24, 25, 26 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) வரும் 27 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.