நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்

பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூா் - திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image

ரயில்.

Updated On :14 ஜூன் 2026, 12:28 am IST

பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூா் - திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, கான்பூா் சென்ட்ரல் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (01927) வரும் 17, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - கான்பூா் சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயிலானது (01928) வரும் 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும்.

8 குளிா்சாதனப் பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிப் பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாராங்கல், ராம்குண்டம், சிா்பூா் காகல்நகா், பால்ஹா்ஷா, சந்தா்பூா், நாக்பூா், இட்டாா்சி, போபால், பினா, லலித்பூா், ஜான்சி, ஓரை, பொக்ரயான் வழியாக கான்பூருக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, கான்பூரிலிருந்து புதன்கிழமை காலை 8.10 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.40 மணிக்கு வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.