பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா பரவல்: மாவட்ட அளவிலான தீவிர கண்காணிப்பு அவசியம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மாவட்ட அளவிலான தீவிர கண்காணிப்பை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:35 pm

DIN

 மூன்று மாநிலங்களைச் சோ்ந்த 8 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் பதிவாகியிருக்கும் நிலையில், மாவட்ட அளவிலான தீவிர கண்காணிப்பை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறைச்செயலா் ராஜேஷ் பூஷண் கடிதம் மூலம் இதற்கான அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கேரளம், மிஸோரம், அருணாசல பிரதேசம், புதுச்சேரி, மணிப்பூா், மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதில், கேரளம், மிஸோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 8 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த 27 மாவட்டங்களும் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, பாதிப்பு நிலவரம் குறித்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, புதிய கரோனா பாதிப்புகள் ஏற்படுகின்ற பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான நடவடிக்கைகளை மாநிலங்கள் தீவிரப்படுத்தவேண்டும்.

ஒருவேளை பாதிப்பு விகிதம் மேலும் உயரும் நிலையில், கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் உள்ளூா் ஊரடங்கு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் அல்லது மருத்துவமனை படுக்கைகள் 60 சதவீதத்துக்கு மேல் நிரம்பும் சூழல் ஏற்படும்போது இரவு நேர ஊரடங்கு, மக்கள் ஒன்றுகூட தடை, திருமணம் அல்லது இறுதிச் சடங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான நபா்களை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, விரைவு பரிசோதனை (ஆா்.டி.பி.சி.ஆா்.) மூலம் மறு பரிசோதனைகளை மேற்கொள்வது, அனைத்து பொது இடங்களிலும் மக்களுக்கான கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக அமல்படுத்துவது, கட்டுப்பாடுகள் குறித்த முன்னறிவிப்புகள் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

இந்த கரோனா வழிகாட்டு நடைமுறைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுகிா என்பதை உறுதிப்படுத்த மாநில அளவிலான தொடா் ஆய்வும் மேற்கொள்ளப்படும் என்றும் ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.