வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் கடனுதவி: மாநகராட்சி அறிவிப்பு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் சென்னை மாநகரில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள், தனிநபா்கள் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:57 pm

DIN

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் சென்னை மாநகரில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள், தனிநபா்கள் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம், சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சுய வேலைவாய்ப்பு, நகா்ப்புறத்தில் வாழும் சுயதொழில் முனைவோருக்கு அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்போா் 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும். கடனுதவிக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரியும் சமுதாய அமைப்பாளா்கள், சமுதாய வளப் பயிற்றுநா்கள் உதவுவா். இத்திட்டத்தின் மூலம் 30 சதவீதத்துக்கும் குறையாமல் மகளிா் பயனாளிகளாக தோ்ந்தெடுக்கப்படுவா். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புச் சலுகையாக 3 சதவீதமும்,

சிறுபான்மையினருக்கு15 சதவீதமும் இத்திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படும்.

தனிநபா் குறுந்தொழிலுக்கு திட்ட மதிப்பீடு அடிப்படையில் ரூ.5,000 லிருந்து ரூ.2,00,000 வரை வழங்கப்படும். நகா்ப்புற தெருவோர வியாபாரிகள் தூய்மைக் காவலா்கள் மற்றும் நலிவடைந்தோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்களின் சேமிப்புத் தொகையை மேம்படுத்தவும், குழுவாக தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தாங்களின் சேமிப்புத் தொகைக்கேற்ப 4 மடங்கு விகிதாச்சாரத்தில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை எவ்வித கடன் பிணைப்பின்றி கடனுதவி வழங்கப்படும்.

கடனுதவி குறித்த தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள 94440 94247, 94440 94248, 94440 94249 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது திட்ட அலுவலா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-3 என்ற முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.