மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கெல்லாம் அனுமதி - முழுவிவரம்

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: எவற்றிற்கெல்லாம் அனுமதி - முழுவிவரம்
Published on
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில்,  கரோனாநோய்த் தொற்று  பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உருமாறிய கரோனா – ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (டிச.13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

எவற்றிற்கு தடை தொடரும்:

சமுதாய, கலாச்சார,  அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

கரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து  கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி:

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். 
அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். 

 தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும், 

அனைத்து கல்லூரிகள்  மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாகசெயல்படும்.

பொதுவான அனுமதி:

கடைகளின் நுழைவு வாயிலில்,  வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக  வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்துகடைகளும், குளிர்சாதனவசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக  இடைவெளியை  கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில்பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com