நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பலியானதாக விமானப் படை அறிவித்துள்ளது.
ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்குக்கு பெங்களூருவில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
IAF is deeply saddened to inform the passing away of braveheart Group Captain Varun Singh, who succumbed this morning to the injuries sustained in the helicopter accident on 08 Dec 21. IAF offers sincere condolences and stands firmly with the bereaved family.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 போ் பயணித்த விமானப்படை ஹெலிகாப்டா் டிச. 8-ஆம் தேதி குன்னூா் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 போ் உயிரிழந்தனா்.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்து விபத்தில் சிக்கிய குரூப் கேப்டன் வருண் சிங், ஆபத்தான நிலையில் 85 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையும் படிக்கலாமே.. தேஜஸ் விமான விபத்தை தவிர்த்ததற்காக விருது பெற்றவர் வருண் சிங்
சிகிச்சையின் போது, வருண் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும் என்ற நம்பிக்கையோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். தீக்காயங்கள், தொற்று போன்றவற்றில் இருந்து விரைவாக குணம்பெறவேண்டி ஹைபா்பேரிக் ஆக்சிஜன் தெரபியும் வருண் சிங்குக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
பிரதமர் மோடி இரங்கல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபரான வருண் சிங், சிகிச்சைபலனின்றி இன்று பலியானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவை எப்போதும் நினைவில்கொள்ளப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.