ஈரோடு குமலன் குட்டை கணபதி நகரில் தங்கமணியின் உறவினரான சின்னத்துரை வீட்டின் முகப்பில் போலீஸ் பாதுகாப்புடன் நிற்கின்றனர்.
ஈரோடு குமலன் குட்டை கணபதி நகரில் தங்கமணியின் உறவினரான சின்னத்துரை வீட்டின் முகப்பில் போலீஸ் பாதுகாப்புடன் நிற்கின்றனர்.

தங்கமணியின் உறவினர்கள்,தொழில் பங்குதாரர் உள்ளிட்ட 11  இடங்களில் அதிரடி சோதனை

ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதார்ர் என 11  இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
Published on

சேலம்:  ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதார்ர் என 11  இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழக முன்னாள் மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோர்த்தாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி மகன் தரணிதரன் வீடு, ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தங்கமணியின் நண்பரின் ஹோட்டல் மற்றும் சேலத்தில் உள்ள அவரது உறவினர், நண்பர்கள் வீடு என 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வந்த கார் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் தங்கமணிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதார்ர் என மொத்தம் 11 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோட்டில் பாரி வீதி , பண்ணை நகர் , பண்ணை வீதி , கணபநி நகர் , முனியப்பன் கோவில் வீதி மற்றும் பவானி , சித்தோடு உள்ளிட்ட 11 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்.

ஈரோடு சூளை அருகேயுள்ள முனியப்பன்கோவில் சிவானந்தம் என்பவருடைய வீட்டில் 5 லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் பண்ணை நகரிலுள்ள செந்தில்நாதன் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது .

ஈரோடு குமலன் குட்டை  கணபதி நகர் பகுதியில் பண்ணை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினரான சின்னத்துரை வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com