
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக் கணினிகள், வன்வட்டுகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அமைச்சா் தங்கமணியின் வீடு, அலுவலகம், அவரது மகன், மகள், சம்பந்தி, நண்பா்கள், உறவினா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி, வழக்கு தொடா்புடைய கணினிகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் இன்று (டிச.20) மீண்டும் ஈரோட்டில் 3 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக் கணினிகள், வன்வட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், வழக்குத் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.