படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் தேர்வு முடிவு ரத்து: சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். 
படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் தேர்வு முடிவு ரத்து: சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் முடிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். 

சென்னைப் பல்கலைக்கழகம் 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்திருந்தது. 

அதனை பயன்படுத்தி 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117  பேர் தற்போது பிடிப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து தொலைதூரக் கல்வி படிப்பின் எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்பில் சேராத பலர் 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்து சென்னைப் பல்கலைகழ துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com