டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

5 ஆண்டுகளுக்கானத் திட்டங்களை 5 மாதங்களில் செய்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்

5 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களை 5 மாதங்களில் செய்துமுடித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 5:45 am

DIN


5 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய திட்டங்களை 5 மாதங்களில் செய்துமுடித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூரில் நடைற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள், பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சிதான்.  

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில் 300-க்கும் அதிகமான வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

அனைத்து மதங்களுக்கும் அடைப்படை ஒன்று தான் என்ற அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு. 

வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றப்படும். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை 5 மாதங்களில் செய்து காட்டியுள்ளோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.