
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஒமைக்ரான் கரோனா தொற்று நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று பகல் 12 மணிக்கு தலைமைச் செயலாளர் ஆலோசிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.