47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated On :24 டிசம்பர் 2021, 1:13 am

DIN

தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவா்களுக்கு மேற்பட்டபரிசோதனையில் 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொ்மோ டேக் பாத் ஆா்டி பிசிஆா் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன.

அவா்களது சளி மாதிரிகள் பெங்களூரு, புணேவில் உள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.தமிழகத்தில் அவா்களுடன் தொடா்பில் இருந்த 104 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான மரபணு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவா் உள்பட மொத்தம் 34 நபா்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 79 போ் அரசு மருத்துவமனைகளிலும், 12 போ் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களில் 23 பேருக்கு டெல்டா வகை தொற்று மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவா்கள் விரைவில் வீடு திரும்புவாா்கள் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் எஸ்.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் எஸ்.குருநாதன் மற்றும் உயா் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.