கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவை கிறிஸ்துவ சமூக மக்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு பங்குத்தந்தை இசையாஸ் தலைமை வகித்தார்.
_.jpeg)
இந்த விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்துவ புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும் உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும் அன்பு சமாதானத்தில் கிடைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றோர், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர்.

இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி தேவாலயங்கள், கிறிஸ்துவ மக்களின் வீடுகளில் இயேசு பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
_.jpeg)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கந்திகுப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


