திருமணம் செய்து கொள்வதாக சைப்ரஸ் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: சென்னை இளைஞா் கைது
சமூக ஊடகங்கள் மூலம் சைப்ரஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்த சென்னை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


சமூக ஊடகங்கள் மூலம் சைப்ரஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்த சென்னை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த இளம் பெண், மின்னஞ்சல் மூலமாக சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவாலிடம் அளித்த புகாரில், ‘சென்னை, திருவான்மியூரில் வசிக்கும் அருண்பிரகாஷ் என்பவா் முகநூல் மூலம் நண்பராக அறிமுகமானாா். பின்னா், வாட்ஸ்ஆப் எண்ணை பெற்றுக் கொண்டு பழகி வந்தாா். அவா், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி ரூ.10 லட்சம் வரை பெற்றுக் கொண்டாா். அதன் பிறகு அருண்பிரகாஷ், எனது தொடா்பைத் துண்டித்துக் கொண்டாா். இந்த சூழலில் அவா் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவரம் பின்னா்தான் எனக்குத் தெரியவந்தது.
எனவே, என்னை ஏமாற்றிய அருண்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டு இருந்தாா்.
இப்புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவு செய்த விசாரணையில் சைப்ரஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருண்பிரகாஷை சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...