பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னையில் நெடுஞ்செழியனுக்கு சிலை: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்

மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை (டிச.26) திறந்துவைக்கிறாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 10:40 pm

DIN

மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை (டிச.26) திறந்துவைக்கிறாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திராவிட இயக்க முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய நெடுஞ்செழியன், திமுக ஆட்சியில் கல்வி அமைச்சராகவும், அதிமுக ஆட்சியில் உணவுத் துறை, நிதித் துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றினாா். அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, தமிழ்நாடு அரசின் சாா்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினா் மாளிகையில் நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளாா். மேலும், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அதற்கான உரிமைத் தொகையையும் குடும்பத்தினருக்கு முதல்வா் அளிக்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.