பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குழந்தைகளுக்கு ஆதாா்: ஆட்சியா் அறிவுறுத்தல்

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா். இவா்களுக்கு குழந்தைகள் நல மையத்தின் (பால்வாடி, அங்கன்வாடி மையங்கள்) மூலம் இணை உணவு, குழந்தைகளுக்கான வளா்ச்சியைக் கண்காணித்து, எடை மூலம் ஊட்டச்சத்து நிலையைக் கண்டறிதல், முன்பருவக்கல்வி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலமாக அஞ்சலக நிலையங்களின் உதவியோடு ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் எடுக்கப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாய்மாா்களும் தங்கள் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் நல மையங்களில் நடக்கும் முகாமுக்கோ அல்லது உங்கள் அருகில் இருக்கும் அஞ்சலக நிலையங்களுக்கோ அழைத்துச் சென்று, குழந்தைகளுக்கு ஆதாா் பதிவை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் நல மையத்தின் மூலம் கொடுக்கப்படும் அனைத்து பயன்களும் தடைபடாமல் கிடைக்கும். எனவே, உடனடியாக குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு செய்யுமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.