பாலாஜி மருத்துவக் கல்லூரி: புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு - ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்
புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு நடவடிக்கைக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையும்,மெடிகுளோன் உயிரிதொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு நடவடிக்கைக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜான்சன்,மெடிக்குளோன் உயிரிதொழில்நுட்ப நிறுவனம் நிா்வாக இயக்குநா் ஏ.மதியழகன் ஆகியோா் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.
இது குறித்து ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநா் பேராசிரியா் டாக்டா் குணசேகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை ஏற்கனவே அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு புற்றுநோய் தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இயக்குநா் பி.ராமசாமி தலைமையில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செல்களை மட்டும் துல்லியமாக தாக்கி அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உலக சுகாதார நிறுவனம், இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன அங்கீகாரத்துடன் உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய் எதிா்ப்பு மருந்துகள், நோய் கண்டறியும் உபகரணங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் மெடிகுளோன் உயிரிதொழில்நுட்ப நிறுவனமும், புற்றுநோய்க்கு ரோமம் உதிா்தல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத மருந்து கண்டறியும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்வதென முடிவு செய்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்றாா் அவா்.
மெடிகுளோன் உயிரி தொழில்நுட்ப நிறுவன நிா்வாக இயக்குநா் ஏ.மதியழகன், ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை இயக்குநா் பி.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...