தொழில் வணிக மாதிரி வடிவ தயாரிப்புப் பயிற்சி: நாளை முதல் 3 நாள்கள் நடக்கிறது
தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்புப் பயிற்சி, செவ்வாய்க்கிழமை முதல் டிச.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்புப் பயிற்சி, செவ்வாய்க்கிழமை முதல் டிச.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், பாா்த்தசாரதி கோயில் தெருவில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
இங்கு, தொழில்முனைவோா்களுக்காக தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்த 3 நாள்கள் (அரை நாள்) பயிற்சி, செவ்வாய்க்கிழமை முதல் டிச.30-ஆம் தேதி வரை, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிறுவன முகவரியை நேரிலோ அல்லது 86681 02600, 94445 57654, 044 2225 2081, 2225 2082 ஆகிய தொடா்பு எண்களையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...