பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் ஆண்டு விழா: ஈரோட்டில் கொடியேற்றி காங்கிரஸார் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோட்டில்   கட்சிக் கொடியேற்றி  காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :28 டிசம்பர் 2021, 9:17 am

DIN

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று காலை ஈரோடு மாநகரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நிர்வாகிகள் கொடியேற்றி, மகாத்மா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

Story image

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.சுரேஷ்,  விஜயபாஸ்கர்  மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் பாஷா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், முன்னாள் சூரம்பட்டி கவுன்சிலர் சாம்ராட் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ்  137- வது  நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.

மொடக்குறிச்சி பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி கிழக்கு வட்டாரத் தலைவர் கதிர்வேல், தெற்கு வட்டாரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு வட்டாரத் தலைவர்  ரவி, மாவட்டச் செயலாளர் பூவை ராஜன் ஆகியோர் கலந்துகொணடனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.