வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மழை வெள்ளம்: நள்ளிரவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நேற்று (டிச.30) பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

News image
ரிப்பன் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Updated On :30 டிசம்பர் 2021, 6:34 pm

DIN

சென்னையில் நேற்று (டிச.30) பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். . 

சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேரில் வந்த அவர், மழை பாதிப்பு குறித்தும், வெள்ள நீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

சென்னையில் பிற்பகல் 3 மணி முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்தும், வெள்ள நீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.