வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘10 ஆண்டுகளில் குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர்’: முதல்வர் ஸ்டாலின்

கடந்த 10 ஆண்டுகளில் சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என முந்தைய ஆட்சியாளர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :31 டிசம்பர் 2021, 5:14 am

DIN

கடந்த 10 ஆண்டுகளில் சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளனர் என முந்தைய ஆட்சியாளர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் வெள்ளநீரை வெளியேற்று பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“எப்போதும் வானிலை மையத்திலிருந்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களே எதிர்பாராமல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ள நீரை மோட்டர்கள் மூலம் வெளியேற்றி இன்றுக்குள் சரிசெய்யப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி உள்ளார்கள். அடுத்த பருவமழைக்குள் அனைத்து சீரமைக்கப்படும் என்றார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.