தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணப்பாறை அருகே புனித வன அந்தோனியார் கோவில் ஜல்லிக்கட்டு

மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

News image
மணப்பாறை அருகே புனித வன அந்தோனியார் கோவில் ஜல்லிக்கட்டு
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN

மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காண்கின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் ஆலய திடலில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

Story image

600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியினை வருவாய் வட்டாட்சியர் லஜபதிராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

கோயில் காளை ஊர் முக்கியஸ்தர்களால் தாரைத்தப்பட்டைகள் முழங்க குத்தாட்டத்துடன் வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது. முதலில் கோவில் காளைகள் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட நிலையில், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.

Story image

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர்.

Story image

காளைகளை பிடித்த வீரர்களுக்கு எல்.இ.டி. டிவி, தங்கக் காசு, வெள்ளிக்காசு, பட்டுபுடவை, சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மணப்பாறை பகுதியில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் சுற்றுவட்டார கிராம மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியினை காண நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.