திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா பலி: கடந்த 10 நாள்களில் 150-க்கும் கீழ் குறைந்தது

நாட்டில் கரோனா உயிரிழப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 24 மணி நேரத்தில் நேரிடும் உயிரிழப்பு கடந்த 10 நாள்களில் 150- க்கும் கீழ் குறைந்துள்ளது.

News image
கரோனா பலி: கடந்த 10 நாள்களில் 150-க்கும் கீழ் குறைந்தது
Updated On :8 பிப்ரவரி 2021, 10:30 am

DIN

புது தில்லி:  நாட்டில் கரோனா உயிரிழப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 24 மணி நேரத்தில் நேரிடும் உயிரிழப்பு கடந்த 10 நாள்களில் 150- க்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முக்கிய சாதனையாக கடந்த 10 நாள்களாக நாட்டில் அன்றாட உயிரிழப்புகள் தொடர்ந்து 150-க்கும் குறைவாகவே பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 84 உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

தரமான மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுடன் கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனை நடவடிக்கைகளினால், உயிரிழப்புகள், தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி, அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவுகள், லடாக் (யூனியன் பிரதேசம்), சிக்கிம், ராஜஸ்தான், மேகாலயா, மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய 17 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,48,609 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.37 சதவீதம் மட்டுமே ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 11,831 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிப்ரவரி 8, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,66,408 பேர், புதுச்சேரியில் 3,532 பேர் உட்பட, நாடு முழுவதும் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (58,12,362) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,304 முகாம்களில் 36,804 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 1,16,487 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.05 கோடியைக் கடந்துள்ளது (1,05,34,505). பாதிக்கப்பட்டோருக்கும், குணமடைந்தோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 1,03,85,896 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.20 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.