பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலை வாழை விருந்து!

விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினருக்கு காவல்துறையினர் உணவு உபசரிப்பு

News image
கைது செய்யப்பட மாற்றுத்தினாளிகளுக்கு தலை வாழை இலையில் விருந்து!
Updated On :10 பிப்ரவரி 2021, 5:11 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

போராட்டம், மறியல் போன்றவைகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோருக்கு காவல் துறை சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்படும். வழக்கமாக அந்த உணவு சாதாரண உணவு வகைகள் பொட்டலங்களில் வழங்கப்படும்.

Story image

ஆனால், வானூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு தலை வாழை இலை போட்டு காவல்துறையினர் உணவு வழங்கியது பெரும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

Story image

மாற்றுத்தினாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தின் உணவு பரிமாறும் கூடத்தில் அவர்கள் அனைவரும் அமர வைக்கப்பட்டு, காவலர்களே அவர்களுக்கு உணவு பரிமாறியது நெகிழ்ச்சியாக இருந்தது.

Story image

காவலர்கள் என்றாலே பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்வார்கள் என்ற எண்ணம் பொதுவெளியில் இருந்து வரும் நிலையில் மாற்றுத்தினாளிகளுக்கு தங்கள் கைகளால் உணவு வழங்கியது கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.