ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிலம்பம்: திருவள்ளூரைச் சேர்ந்த 5 பேருக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு அகாதெமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றனர்.

News image
சிலம்பம்: திருவள்ளூரைச் சேர்ந்த 5 பேருக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்
Updated On :9 பிப்ரவரி 2021, 2:59 pm

DIN

திருவள்ளூர்: மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு அகாதெமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றனர்.

அமெச்சூர் சிலம்பம் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி கன்னியாகுமரியில் உள்ள சி.எஸ்.ஐ. அரங்கத்தில் கடந்த 5,6,7 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இதில் ஜூனியர், சப் ஜீனியர் என கம்புச் சண்டை, கம்பு வீச்சு, அலங்கார கம்பு வீச்சு, ரெட்டை சுருள்வாள் வீச்சு, போன்ற பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் இருபாலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு சிலம்பம் அகாதெமி பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவர் அக்ரிஷ் மினி ஜூனியர் நேரடி போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஜூனியர் பிரிவில் எஸ்.கோகுல் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

அதேபோல் சீனியர் பிரிவில் பெண்களுக்கான போட்டியில் எஸ்.யேமாவதி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் மற்றும் அலங்கார வீச்சு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

அதேபோல், சீனியர் பிரிவில் ஆண்களுக்கான சிலம்ப நேரடி போட்டியில் கே.ஹரிஷ் வெண்கலமும், இரட்டை வாள் சுருள் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.

சீனியர் பிரிவில் ஆண்களுக்கான அலங்கார கம்பு வீச்சு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றனர். இப்போட்டியில் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சிலம்ப பயிற்றுநர் கே.பாஸ்கர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.