புத்திர கவுண்டம்பாளையம் ஜல்லிக்கட்டு: வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா
புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அடுத்து, வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.


புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அடுத்து, வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். அதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதம்பி மற்றும் விழாக் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...