புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகாசி பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் 32 ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவினையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

News image

சிவகாசி பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

Updated On :10 பிப்ரவரி 2021, 8:26 am

DIN

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் 32 ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவினையொட்டி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை தாளாளர் சோலைசாமி தொடங்கி வைத்தார். அரசுப் போக்குவரத்து பயிற்சி வாகனத்தில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் சாலை விதிமுறைகள், சாலை குறியீடுகள் உள்ளிட்டவை விளக்கப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியை கல்லூரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் சோலைசாமி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பிஜி விஷ்ணுராம் மாரிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் கி.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் துர்க்கை ஈஸ்வரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.