சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மணப்பாறை காவல்துறை மற்றும் இருசக்கர வாகனப் பழுது பார்ப்போர் நலச்சங்கங்கள் சார்பில் இருச்சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மணப்பாறை உள்கோட்ட காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கங்கள் சார்பில் இருச்சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் 200-க்கும் மேற்பட்டோர் சாலை விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன், காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொத்தமேட்டுபட்டி நேரு சிலையிலிருந்து துவக்கிய பேரணி திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை, கச்சேரி ரோடு, புதுத்தெரு, பேருந்து நிலையம், மதுரை சாலை, திண்டுக்கல் சாலை வழியாக சென்று பின் பெரியார் சிலை திடலில் நிறைவுபெற்றது. இதில் காவல்துறையினர், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


