துணை முதல்வரின் தேர்தல் பிரசாரத்திற்கு வாகனம் தயார்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு பிரத்யேக வாகனம், திருப்பதியில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு பிரத்யேக வாகனம், திருப்பதியில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்குவேன் என்றும், தேர்தல் பிரசார பயணத் திட்டத்தைக் கட்சியின் தலைமைக்கு வழங்கியுள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலின் போது துணை முதல்வர் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய டி.என்-60-ஏ.எல்-2345 என்ற எண்ணுள்ள வாகனத்தை, அவரது மகன் ஜெயபிரதீப் பெரியகுளத்திலிருந்து திருப்பதிக்குக் கொண்டு சென்று சிறப்புப் பூஜை செய்து, சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்திற்காகத் தயார் நிலையில் வைத்துள்ளார்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தை விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...