வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வெள்ளக்கோவிலில் கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை கார் மீது அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2021, 12:28 pm

DIN

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை கார் மீது அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

தாராபுரம் தாலூக்கா, கன்னிவாடி பக்கமுள்ள ஒரத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் மகேந்திரன் (22). இவர், நண்பர்கள் இரண்டு பேருடன் மொத்தம் 3 பேர் ஒரே இருசக்கர வானத்தில் வெள்ளக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது கரூர் சாலை, நடேசன் நகர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது பைக் மோதியது.

இந்த விபத்தில் ஆம்னி வேன் சாலையின் ஒரு பக்கம் கவிழ்ந்தது. பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்களும் படுகாயம் அடைந்தனர். இதில் பைக்கை ஓட்டி வந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.  வெள்ளக்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.