

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநரின், செயலர் தேவநீதிதாசை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் பாஜக தலைவரும், எம்எல்ஏவுமான சாமிநாதன் ஆகியோர் புதன்கிழமை நேரில் சந்தித்து முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன்பின்னர் ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறும்போது,
முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எங்களுடைய 14 எம்எல்ஏக்கள் கையெழுத்துடன் மனுவாகக் கொடுத்துள்ளோம்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.