ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

'அருகிவரும் பறவையினங்கள் கரைவெட்டியில் காணப்படுகின்றன'

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

News image
'அருகிவரும் பறவையினங்கள் கரைவெட்டியில் காணப்படுகின்றன'
Updated On :19 பிப்ரவரி 2021, 10:43 am

DIN

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

அரியலூர்: தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகளவில் தற்சமயம் காணப்படுகிறது என பறவைகள் கணக்கெடுப்புக் குழு தலைவர் பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Story image

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில், தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகையியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சரணாலயத்தில் உள்ள தொலைநோக்கி உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவைகளின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம் உள்ளிட்ட விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இறுதியில் இதுகுறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிக்கப்படவுள்ளது.

Story image

கணக்கெடுப்புப் பணி குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியன் மேலும் கூறியது: தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய நான்கு வகை பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப்படுகிறறது. அதேபோல், லடாக் பகுதியில் அதிக அளவில் உள்ள வரித்தலை வாத்து இங்கு அதிகளவில் காணப்படுகிறது. 

Story image

மேலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளd. பல்வேறு வகையான வெளிநாட்டுப் பறவைகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், பறவைகள் பலவும் ஆங்காங்கே தங்கியுள்ளன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.