கரூரில் 70 ஆண்டு பழமையான காந்தி சிலை அகற்றம்: ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு

கரூரில் 70 ஆண்டு பழமையான காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி
கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி


கரூர்: கரூரில் 70 ஆண்டு பழமையான காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டு பழமையை காந்தி சிலையை அகற்றிவிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதிதாக திறப்பதற்காக அவசர கதியில் பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முறையான டெண்டர் விடாமல் ரகசியமாக பணி செய்து சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 70 ஆண்டு பழமையான காந்தி சிலை அகற்றப்பட்டு தரமற்ற காந்தி சிலையை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com