திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. எனினும் 2-ம் கட்டப் பேச்சு மீண்டும் நடைபெறும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத்தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோன்று காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாவது, ''அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு குறித்து 2-ம் கட்டப் பேச்சு தொடரும்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிப்ரவரியில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 8.60% வீழ்ச்சி!

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒட்டவைத்த கண்ணாடி: ஜி.கே.வாசன் விமா்சனம்

ரஜினிகாந்த் வாா்த்தை எப்போதும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது: வானதி சீனிவாசன்

சுவாமிமலை அருகே கைவிடப்பட்ட சிசு மீட்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

