ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்: 50 சதவிகித பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறிவித்துள்ள கால வரையற்ற வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை முதல் திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது.

News image
போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்
Updated On :25 பிப்ரவரி 2021, 2:32 am

DIN

தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறிவித்துள்ள கால வரையற்ற வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை முதல் திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுட்டு வருகின்றன. சென்னையில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 

கும்பகோணம், தூத்துக்குடி, விருதுநகர், மரக்காணம் என பல பணிமனைகளில் மிகக்குறைந்த  அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. 

சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படு வருகின்றன. 

சென்னையில் பல்லவன் இல்லம் மற்றும் பல்வேறு பணிமனைகளில் இருந்து குறைந்த அளவே உள்ளூர் பேரும்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.   கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகளும் குறைந்தயளவே இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.