ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது.

News image
காங்கிரஸ்
Updated On :26 பிப்ரவரி 2021, 7:28 am

DIN


புதுச்சேரி:  புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை முதல் விருப்ப மனு வாங்கப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
வரவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சனிக்கிழமை (பிப். 27) முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும்.

முன்னதாக, விருப்ப மனுவை ரூ. 100 செலுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை, உரிய ஆவணங்களை இணைத்து, பொதுப்பிரிவினர் ரூ. 5,000, ஆதிதிராவிடர் மற்றும் பெண்கள் ரூ. 2,500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மனுக்களை பெறவும், பரிசீலித்து தலைமைக்கு அனுப்பவும் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் தனுஷ், இளையராஜா, ரகுமான், மணிமாறன் ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.