புதுச்சேரி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணா ராவை கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை நீக்கியுள்ளது.
ஏனாம் தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் அரசில் சுகாதாரம், மீன்வளம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் கட்சியின் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த 15-ம் தேதி அறிவித்து ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் சிவகொழுந்துவிற்கு அஞ்சல் வழியே அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.