ஆங்கில புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்பட்டது. 
சின்னாறு பரிசல் துறையில் பரிசல் பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள்
சின்னாறு பரிசல் துறையில் பரிசல் பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள்
Updated on
1 min read



பென்னாகரம்: ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்பட்டது. 

தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகம் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் ,கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஒகேனக்கலுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்பட்டது. 

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்தும், காவிரி ஆற்றின் கரையோரம் பகுதியான முதலைப்பண்ணை, நாகர்கோவில் ,ஊட்டமலை, ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றின் அழகை காண சின்னாறு பரிசல் துறையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு மணல்மேடுகள், பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட பகுதிகளையும், பாறை முகடுகளையும் கண்டு ரசித்தனர்.

புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் தொங்கு பாலம் நடைபாதை, முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. 

மேலும் சுற்றுலா பயணிகள் வருகையினால் கட்லா, ரோகு, பாப்லெட், அரஞ்சான், சோனாங் கெளுத்தி உள்ளிட்ட மீன்களை வாங்கி சமைத்து பூங்கா, சிறுவர் பூங்கா மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். 

சுற்றுலா பயணிகள் தாங்கள் வந்த வாகனத்தினை பேருந்து நிலையம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம் , சத்திரம் முதலைப்பண்ணை ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி சென்றனர். 

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் குற்றச் செயல்கள் ஏற்படாதவாறு சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com