ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அரசியலில் தொடர்பான முடிவினை ரஜினிகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திண்டுக்கல்லில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியலில் தொடர்பான முடிவினை ரஜினிகாந்த் மறு பரிசீலனை செய்ய கோரி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனவர். 

News image

திண்டுக்கல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 7:25 am

DIN


திண்டுக்கல்: அரசியலில் தொடர்பான முடிவினை ரஜினிகாந்த் மறு பரிசீலனை செய்ய கோரி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனவர். 

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாகவும், அதற்காக ஜனவரியில் புதிய கட்சித் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த உடல் நலப் பாதிப்பு காரணமாக திடீரென தனது முடிவினை மாற்றிக் கொண்டார். அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் இந்த மாற்றத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  தனது அரசியல் நிலைபாடு தொடர்பான முடிவினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் நகரில் அவரது ரசிகர்கள் சனிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனவர். 

அறவழிப் போராட்டம் என்ற பெயரில், திண்டுக்கல் மணிக்கூண்டும் மற்றும் கல்லறைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில கலந்து கொண்ட அவரது ரசிகர்கள், ஆன்மீக அரசியலை ரஜினியால் மட்டுமே கொடுக்க முடியும், ரஜினி ஒருவருக்கு மட்டுமே வாக்களிப்போம், பிறருக்கு தங்கள் ஓட்டை செலுத்தப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.