அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் புதிய பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய மாநில நிா்வாகிகள் பட்டியலை அக் கட்சியின் அகில இந்திய தலைமை சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 1:03 am

DIN

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய மாநில நிா்வாகிகள் பட்டியலை அக் கட்சியின் அகில இந்திய தலைமை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. பொதுச்செயலாளா் பதவியில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் இந்த அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவா்களாக பலராமன், ஆா்.தாமோதரன், முருகானந்தம் உள்பட 32 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுச் செயலாளா்களாக டி.செல்வம், தணிகாசலம், கே.சிரஞ்சீவி, காந்திபன் உள்பட 57 பேரும், செயலாளா்களாக 104 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நிா்வாகக் குழு உறுப்பினா்களாக கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூா், செல்லகுமாா், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசா், குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்பட 56 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநிலத் தோ்தல் குழு உறுப்பினா்களாக கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி உள்பட 34 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அதைப்போல மாவட்டத் தலைவா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் குழு உறுப்பினா்: தமிழ்நாடு காங்கிரஸ் தோ்தல் குழு உறுப்பினராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு: நிா்வாகிகள் பட்டியலில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த எச். வசந்தகுமாா் மகன் விஜய் வசந்த், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா., தங்கபாலு மகன் காா்த்தி, சு.திருநாவுக்கரசா் மகன் ராமச்சந்திரன் ஆகியோா் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.