ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாட்டில் இருந்து கரோனாவை விரட்டுவோம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன்

போலியோவை விரட்டியது போல் கரோனாவையும் நாட்டில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

News image
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
Updated On :8 ஜனவரி 2021, 5:49 am

DIN


சென்னை: போலியோவை விரட்டியது போல் கரோனாவையும் நாட்டில் இருந்து விரட்டுவோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 மையங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகள். கரோனா நோய்த்தொற்றை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்றார். 

நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் அதிகரித்தது. 2300 ஆய்வகங்கள் மூலம் கரோனா தொற்று பரிசோதனை நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும்.

இந்தியா குறுகிய காலத்தில் கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. போலியோவை விரட்டியது போல் கரோனாவையும் நாட்டில் இருந்து விரட்டுவோம் என்று ஹர்ஷ வர்தன் கூறினார்.

மேலும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.