கரோனா காலம்: கரோனா நோய்த்தொற்றின் காரணமாக, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியில் மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த 9 லட்சத்து 69,047 மாணவ-மாணவிகள் பங்கேற்று வருகின்றனா். அவா்களின் வசதிக்காக ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரையிலான காலத்தில் நாளொன்றுக்கு 2 ஜிபி அளவு கொண்ட இணைய இணைப்பு அட்டைகள் விலையில்லாமல் அளிக்கப்படும். இந்த அட்டைகள் எல்காட் நிறுவனத்தின் வழியாக வழங்கப்படும்.