ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: அமைச்சர்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும். அலங்காநல்லூரில் 655, பாலமேட்டில் 651, அவனியாபுரத்தில் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்.

தை மாதம் மட்டுமல்ல எந்த மாதம் பிறந்தாலும் திமுகவுக்கு வழியே பிறக்காது. தற்போதைய தமிழக அரசே தொடரும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com