ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரை விட சிறப்பாக மாற்ற வேண்டும்: கமல்

ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரத்தை விட சிறப்பாக மாற்ற வேண்டும் என்ற கட்டமைப்புடன் மக்கள் நீதி மய்யம் செயல்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரை விட சிறப்பாக மாற்ற வேண்டும்: கமல்
ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரை விட சிறப்பாக மாற்ற வேண்டும்: கமல்
Published on
Updated on
2 min read

ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரத்தை விட சிறப்பாக மாற்ற வேண்டும் என்ற கட்டமைப்புடன் மக்கள் நீதி மய்யம் செயல்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஈரோட்டில் தொண்டர்களிடையே உள் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். 

அப்போது பேசிய கமலஹாசன், ஒவ்வொரு நகரத்தையும் தலைநகரத்தை விட சிறப்பாக மாற்ற வேண்டும் என்ற கட்டமைப்புடன் மக்கள் நீதி மய்யம் செயல்படுவதாகவும், எங்களது பலமே எங்களது நேர்மை தான் என்றார்.

கட்சிகளின் கொள்கைகளை படித்து ஓட்டு போட்டும் முறை கடந்த  50 ஆண்டுகாலமாக இல்லை என்றும் சாதி பாராமல் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது என்றும் கூறினார். விவசாயிகளுக்குத்  தேவையான மானியத்தை வழங்க வேண்டும், ஏதையும் இலவசமாகக் கொடுக்கக்கூடாது என்ற கமலஹாசன், விவசாயி என்ற பட்டம் பெண்களையும் குறிக்கும்  என்றும் விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சம சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

பாலம் என்பதை லாபமாக நினைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டிய கமலஹாசன், தன் குடும்பம் லாபம் அடைய பல தீட்டங்கள் தீட்டி வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றார். 

மக்கள் நீதி மய்யம் வழங்கும் வீட்டிற்கு ஒரு கணினி என்பது அடிப்படை உரிமை, தமிழகத்திற்கு செய்யும் முதலீடு, அது மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடர்பு என்றும் இதனால் இடைத்தாரர்கள் ஒழிந்து போவார்கள் என்றார்.

மாண்புமிகு என்ற பட்டத்தை மக்கள் கொடுக்க வேண்டும் என்ற கமலஹாசன் , காமராஜர், கக்கனுக்கு கொடுத்தை போல் என்றார். தமிழகத்தை 1 டில்லிரியன் டாலராக வளர்ச்சிப்பாதைக்கு மாற்ற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்றார்.

வீட்டுப் பெண்களுக்கு ஊதியம் என்பது கொடுக்கப்பட்டால் தமிழகத்தை உலகம் திரும்பிப் பார்க்கும் என்றும், உங்கள் கைகளில் என்னை பாதுகாத்தால் ஊழல் காற்று என்னை அணைக்காது என்றும் கமலஹாசன் பேசினார்.

தொடர்ந்து லக்காபுரம் , மொடக்குறிச்சி , சிவகிரி போன்ற பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com