மின்வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அது தொடர்பாக ஆளுநரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அந்த நகல் சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை. இதிலிருந்து உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். நீட் தேர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், ஏற்கவில்லை. ஆனால் தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி நீட் தேர்வை ஆதரித்து விட்டார். இத்தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியும் பலனில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் குமாரபாளையம் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் சாய ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.