47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சசிகலா விடுதலை அறிவிப்பு: சாத்தான்குளத்தில் அமமுக பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சசிகலா 27 ஆம் தேதி விடுதலை ஆவதாக சிறைத் துறை அறிவித்துள்ளது

News image
சசிகலா விடுதலை அறிவிப்பு: சாத்தான்குளத்தில் அமமுக பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
Updated On :20 ஜனவரி 2021, 12:37 pm

DIN


சாத்தான்குளம்: சசிகலா 27 ஆம் தேதி விடுதலை ஆவதாக சிறைத் துறை அறிவித்துள்ளது இதனை வரவேற்று சாத்தான்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் சாத்தான்குளத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக கர்நாடக சிறை துறை அறிவித்துள்ளது. இதனை வரவேற்று இங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் சாத்தான் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தான் ஒன்றிய செயலாளர் திவாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் இளங்கோ- மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தங்கபாண்டியன்- ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகன்; சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .இதில் காமராஜர் சிலை முன்பு பட்டாசு வெடித்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இலக்கிய பிரிவு  செயலாளர் ஜாகிர் உசேன்; ஒன்றிய அவைத் தலைவர் கணேசன்; ஒன்றிய இளைஞரணி செயலாளர் கணபதி; ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் வின்சென்ட்;  முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாபு சுல்தான்; ஊராட்சி செயலாளர்கள் அப்துல் ரகுமான்; பெருமாள்; சுயம்பு; முருகன்; தங்கராஜ்; இயேசு; தாமஸ்; நாராயண பிரபு; சிதம்பரம்; மணிகண்டன்; ஜெயக்குமார்; ஒன்றிய ஐடி பிரிவு செயலாளர் வைரவ ராஜ்; ஒன்றிய இளைஞரணி பொருளாளர் இசக்கி; வண்டிய. இணைச்செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.