சீர்காழி நகை கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி, மகன் கொன்று 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
Encounter Justice!
Encounter Justice!
Published on
Updated on
1 min read


சீர்காழியில் நகை வியாபாரியின் மனைவி, மகன் கொன்று 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறை என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார் . மேலும் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில்  புதன்கிழமை அதிகாலை காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48 ) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளிவில் தன்ராஜ் சௌத்ரியின் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர. அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார் அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் சிடி ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின்  வீட்டு வாசலில் இருந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா இன்ஸ்பெக்டர் மணிமாறன், சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் பணியை முடுக்கிவிட்டனர். 

இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காரில் தப்பிச் சென்ற கொள்ளை கும்பல் சீர்காழி புறவழிச்சாலையில் மேலமாத்தூர் செல்லும் பகுதியில் அந்த காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்தது. 

இதையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதில் தீவிரம் காட்டிய போலீஸார், சீர்காழி அருகே எருக்கூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க விரைந்த போலீஸார், கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட என்கவுன்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தான். மற்ற 2 கொள்ளையர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 16 கிலோ நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு டிஜிபி திரிபாதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com