ராஜ அலங்காரத்தில் லோயர் கேம்ப் வழிவிடும் முருகன்.
ராஜ அலங்காரத்தில் லோயர் கேம்ப் வழிவிடும் முருகன்.

லோயர்கேம்ப்பில் தைப்பூச உற்சவ விழா: தமிழக, கேரள பக்தர்கள் வழிபாடு

தேனி மாவட்டம், கம்பம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. லோயர்கேம்ப்பில் உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் தமிழக, கேரள பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

லோயர் கேம்ப்:
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் குமுளி மலைச்சாலையில் ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் உள்ளது கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு  கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப் பெரியாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. வழிவிடும் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு  கேரளாவில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஆயிரத்துக்கும் மேலான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட தர்ம ஜாக்ரன் அமைப்பு சார்பில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றது.

லோயர் கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் பக்தர்கள்.

கூடலூர்:
கூடலூரில் உள்ள அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  கூடல் வேலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

கம்பம்:
கம்பத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஸ்ரீ சண்முக நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com